ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை வென்றது.
இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.
இந்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி ஆரம்பத்தில் அபாரமாக விளையாடியது.
7 ஓவர்கள் முடிய டெல்லி அணி 64 ரன்களுக்கு ஒரு விக்கெட் கூட இழக்காமல் இருந்தது. பின்னர் ஷாபாலி வர்மா 44 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த பந்தை பௌண்டரி லைனை நோக்கி அடிக்க அந்த பந்து வார்மன் கைக்கு சென்றது.
இதனால் ஷாபாலி வர்மா ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய ஜெமிமா டக் அவுட் ஆனார். இப்படி அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்துகொண்டே இருக்கே டெல்லி கேபிட்டல்ஸ் அணி 18.3 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்களை எடுத்தது.
பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயன்கா படேல் 4 விக்கெட்களையும், சோபி 3 விக்கெட்களையும் வீழ்த்த ஆஷா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களின் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. 8 வது ஓவரில் சோபி 32 ரன்கள் எடுத்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் 14 வது ஓவரில் ஸ்ம்ரிதி மந்தனா 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி 35 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் ரிச்சா கோஷ் 17 ரங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியாக பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 115 ரன்களை எடுத்து. இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை வென்றது.