போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருளான சூடோபெட்ரினை தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குத் திமுக மாஜி நிர்வாகி ஜாபர் சாதிக் தலைமையிலான கும்பல் கடத்தி வந்தது.
இதில், ஜாபர் சாதிக் கூட்டாளிகளான சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோ குமார் ஆகிய 3 பேரை டெல்லியில் வைத்து போதை தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஜாபர் சாதிக்கை கடந்த 26 -ம் தேதி டெல்லி போதை பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகச் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகாமல் தலைமறைவானார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக மாஜி நிர்வாகியான ஜாபர் சாதிக்கை, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார்.
சென்னையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்து ஜாபர் சாதிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜாபர் சாதிக் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்து டெல்லி போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர்.