போலந்து நாட்டை சேர்ந்த வீராங்கனை இகா ஸ்வியாடெக் 2-0 என்ற கணக்கில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் போலந்து நாட்டை சேர்ந்த வீராங்கனை இகா ஸ்வியாடெக் மற்றும் கிரீஸ் நாட்டை சேர்ந்த வீராங்கனை மரியா சக்காரி மோதினர்.
இந்த போட்டியின் முதல் சுற்றில் போலந்து நாட்டை சேர்ந்த வீராங்கனை இகா ஸ்வியாடெக் 6 புள்ளிகளை பெற்று 6-4 என கிரீஸ் நாட்டு வீராங்கனை மரியா சக்காரியை வீழ்த்தினார்.
பின்னர் நிரந்தம் சுற்று நடைபெற்றது. அதிலும் போலந்து நாட்டை சேர்ந்த வீராங்கனை இகா ஸ்வியாடெக் 6 புள்ளிகளை பெற்று மரியா சக்காரியை புள்ளி எடுக்க விடாமல் 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் போலந்து நாட்டை சேர்ந்த வீராங்கனை இகா ஸ்வியாடெக் 2-0 என்ற கணக்கில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.