மதுரையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். பிரதமரின் பிரச்சாரம் பயணம் முடிந்த பின்னர் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக மீது திமுகவினர் உள்பட அனைவருமே அதிருப்பதியில் உள்ளனர். காரணம், ஸ்டாலின் சொன்ன எதையும் செய்யவில்லை. பொய் வாக்குறுதிகளை சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டனர். இப்போது, அதை செயல்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில், அடிப்படை அறிவு இல்லாமல் திமுக பேசி வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒரே நாளில் நடைபெறும் தேர்தல் அல்ல. சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் நடைபெறும் தேர்தலாகும்.
திமுக வலுவான கூட்டணி என்ற மாயை இப்போது உடைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் நாலுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கருத்து கணிப்புகளும் சரி, புள்ளி விவரங்களும் சரி உறுதிபடுத்துகின்றன.
இப்போது, வாக்கு சதவீதம் எங்களுக்கு அதிகரித்து உள்ளது. இதுவே, தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு சாட்சி. நாங்கள் தமிழகத்தில் வலுவாக இருக்கிறோம். அத்துடன் பிரதமர் மோடியின் பிரச்சாரம் பாஜகவுக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையும் கொடுத்துள்ளது.
மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவது உறுதி. இதில் தமிழ்நாட்டின் பங்கு பெரும்பான்மையாக இருக்கும் என்றார்.