வில்வித்தை வீராங்கனையும், அர்ஜுனா விருது பெற்றவருமான ஷீத்தல் தேவி தேர்தல் ஆணையத்தின் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாளமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
இந்திய தேர்தல் ஆணையம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து, இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் சங்க அணி மற்றும் டெல்லி கிரிக்கெட் சங்க அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டியை நடத்தியது.
மக்களவை தேர்தலுக்குக்கான வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் என்ற நோக்கத்துடன் இந்த விளம்பர கண்காட்சி கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் என்ற நோக்கத்துடன் இந்த விளம்பர கண்காட்சி கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
இப்போட்டியானது நேற்று டெல்லியில் உள்ள கர்னைல் சிங் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், புகழ்பெற்ற பாரா வில்வித்தை வீராங்கனையும், அர்ஜுனா விருது பெற்றவருமான ஷீத்தல் தேவி மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பங்கேற்றார் . மேலும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியை வாழ்த்தினர்.
டிடிசிஏ மற்றும் ஐடிசிஏ பிரதிநிதிகள் இந்நிகழ்த்ச்சியில் பங்கேற்றனர். அதேபோல் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நிகில் சோப்ராவும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்காளர்களுக்கான பிரத்யேக வாக்காளர் வழிகாட்டியை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்காக தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் முக்கிய முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டன.
இத்தகைய முயற்சிகள் வரவிருக்கும் பொதுத் தேர்தல்களில் வாக்காளர்களின் பங்களிப்பை, குறிப்பாக மாற்றுத்திறனாளிகளிடையே கணிசமாக அதிகரிக்கும் என்று தேர்தல் ஆணையம் நம்பிக்கை கொண்டுள்ளது.