வடகொரியா தனது கிழக்கு கடற்கரையிலிருந்து, இன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது.
கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகளை விதித்த போதிலும், வடகொரியா அதைக் கண்டுக் கொள்ளாமல், தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில், இன்று மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
வடகொரியா, இன்று காலை அதன் கிழக்கு கடற்கரையில் இருந்து, குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தி உள்ளது. இன்று காலை ஏராளமான ஏவுகணைகளை வட கொரியா ஏவியதைக் கண்டறிந்துள்ளோம் என தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எச்சரிக்கையை மீறி, தொடர்ந்து ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி வருகிறது. இதனால், கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.