பி.சி.சி.ஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இளம் வீரர்களான சர்பராஸ் கான், துருவ் ஜூரல் கிரேடு-சி பிரிவில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா – இங்கிலாந்து ஆண்களுக்கு இடையேயான இந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது.
இதில் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணியில் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், துருவ் ஜூரெல் ஆகியோர் அருமையாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் தற்போது, இந்திய அணியின் இளம் வீரர்களான பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் மற்றும் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் ஆகியோர் பி.சி.சி.சி.-யின் மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பி.சி.சி.ஐ அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தின் போது அவர்களை கிரேடு சி-யில் சேர்க்க அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
2023-24 சீசனுக்கான பி.சி.சி.ஐ மத்திய ஒப்பந்தங்கள் ஏற்கனவே கடந்த மாதம் இறுதி செய்யப்பட்டன. அப்போது அந்த பட்டியலில் இடம் பெறாத சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோர் நேற்று நடைபெற்ற பி.சி.சி.ஐ அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தின் போது மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முடிவில் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரெல் ஆகிய இருவரையும் பி.சி.சி.ஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் கிரேடு-சி-யில் சேர்ப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு வருடத்திற்கு ரூ. 1 கோடி சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.