அசாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலுக்கு சென்று குழந்தை ராமரை தரிசனம் செய்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் அசாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா நேற்று அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று தன் குடும்பத்தாருடன் குழந்தை ராமரை தரிசனம் செய்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று குழந்தை ராமரை தரிசிப்பது என்பது அதிஷ்டம். அந்த அதிஷ்டம் எனக்கு கிடைத்ததை நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று கூறினார்.
மேலும் அவர், “ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் தனது சொந்த மண்ணிற்கு திரும்பியுள்ளார். ராமரின் முகத்தில் ஒரு குறிப்பிட்ட ஈர்ப்பு உள்ளது, அது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது” என்று கூறினார்.
முன்னதாக மார்ச் 13 ஆம் தேதி எடுத்த கணக்கின் படி தினமும் சராசரியாக 1 முதல் 1.5 லட்சம் பக்தர்கள் வந்து செல்வதாக கோயில் அறக்கட்டளை கூறியது.