கேரளாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது நண்பர்களுடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
108 வைணவத் திருத்தலங்கங்களில் முதன்மையானது திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில். உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு சென்று வந்தாலே வாழ்வில் திரும்பும் வரும் என்று நம்பப்படுகிறது.
தினமும் சராசரியாக 70 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய திருமலைக்கு வருகை புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கேரளாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது நண்பர்களுடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
முன்னதாக இவர் மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆடுஜீவிதம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் மோகன்லால் கலந்து கொண்டார்.
மேலும் இந்த படத்திற்கு இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். திரையுலகில் ஏஆர் ரஹ்மான் அறிமுகமான காலகட்டத்தில் மலையாளத்தில் அவர் முதன்முதலாக இசையமைத்தது மோகன்லால் நடித்த ‘யோதா’ என்கிற படத்திற்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.