ராமதாசின் கனவுகளை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க. வின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிரைப்புரையாற்றினார். இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், மற்றும் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
உலகத்திற்கே விஷ்வகுருவாக பிரதமர் மோடி திகழ்கிறார். தமிழகத்தின் பலம் பொருந்திய அனைத்து தலைவர்களை பிரதமர் மோடி அழைத்து வந்துள்ளார். தமிழகத்தில் மாற்றத்திற்கான கூட்டணியாக தே.ஜ கூட்டணி திகழ்கிறது. வருகின்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுகளையும் வென்றுகாட்ட வேண்டும்.
400 தொகுதிகளுக்கு மேல் வென்று, 3-வது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைக்கும். ராமதாசின் கனவுகளை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்றார். 400 மேல் வென்றால் தான் வறுமையை ஒழிக்க முடியும் எனத் தெரிவித்தார்.