தமிழகத்தில் 20204 மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை-பரமக்குடியில் கருமொழி செக்போஸ்டில் பறக்கும் படையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, தேவகோட்டையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் படம் அச்சடிக்கப்பட்ட 47 டி-சர்ட் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் இருந்தது தெரிய வந்தது. அதனைப் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த விவகாரம் குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப இளைஞரணி செயலாளர் கண்ணன் மற்றும் ராமநாதபுரம் பவுசுல்லா ஆகியோரைப்பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.