நாடாளுமன்ற பாதுகாப்பு பணிக்காக மேலும் 250 மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF)வீரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி மக்களவையில் அலுவல்கள் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென தடுப்புகளை தாண்டி அவைக்குள் குதித்தனர்.
எம்.பி.க்கள் அமர்ந்திருந்த சேர் மற்றும் டேபிள்கள் மீது தாவிச் சென்ற அவர்கள் கலர் புகை குண்டுகளை வீசியெறிந்தனர். அதில் இருந்து வாயு வெளியேறியது. அந்த இளைஞர்கள் இருவரையும் எம்.பி.க்களே சுற்றி வளைத்துப் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு பணிக்காக மேலும் 250 மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF)வீரர்கள் ஈடுபடவுள்ளனர். இதில் 230 பேர் பாதுகாப்பு பிரிவுக்கு அனுப்பப்படுவார்கள். மற்றவர்கள் தீயணைப்பு துறைக்கு ஒதுக்கப்படுவார்கள்.
அந்த குழுவில் 2 இன்ஸ்பெக்டர், 45 சப்-இன்ஸ்பெக்டர், 30 உதவி சப்-இன்ஸ்பெக்டர், 35 தலைமை காவலர்கள் மற்றும் 85 கான்ஸ்டபிள் உள்ளனர்.