பரமக்குடி அருகில் தெளிச்சாத்தநல்லூர் என்ற பகுதியில் தாசில்தார் வரதன் மற்றும் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, விளத்தூர் பகுதியில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், உரிய ஆவணமின்றி ஒரு லட்சத்து, 94 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, விளத்தூர் பார்த்திபன் என்பவரை பரமக்குடி தலைமையிடத்து தாசில்தார் சீதாலட்சுமி மடக்கிப்பிடித்து, உயர் அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.
இதேபோல, மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும்படை அலுவலர் கோட்டைராஜா தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.
இதில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.97 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து பாம்பன் பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.