இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே கடற்கொள்ளையர்களின் தாக்குதல் மீண்டும் மீண்டும் அரங்கேறிவருகிறது. அந்த கடற்கொள்ளையர்களில் பெரும்பாலானோர் சோமாலியாவைச் சேர்ந்தவர்கள்.
பலமுறை இந்திய கடற்படையினர் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து பல வணிக கப்பல்களை மீட்டு அவர்களை பத்திரமாக அவர்களின் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
எனவே, சோமாலியாவில் ஏன் கடற்கொள்ளையர்கள் உருவாகியுள்ளனர், சன்னி முஸ்லிம் நாட்டில் உள்ள நிலைமைகள் என்ன, என்பது குறித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது. சோமாலிய பகுதிகளை ஆராய்வதற்கு முன், சமீபத்திய மீட்பு நடவடிக்கைகளை முதலில் பார்ப்போம்.
#INSSumitra Carries out 2nd Successful #AntiPiracy Ops – Rescuing 19 Crew members & Vessel from Somali Pirates.
Having thwarted the Piracy attempt on FV Iman, the warship has carried out another successful anti-piracy ops off the East Coast of Somalia, rescuing Fishing Vessel Al… https://t.co/QZz9bCihaU pic.twitter.com/6AonHw51KX— SpokespersonNavy (@indiannavy) January 30, 2024
கடற்கொள்ளையர்களை கைது செய்த இந்திய கடற்படை :
2023 டிசம்பர் மாதம் மால்டா நாட்டு கொடியுடன் சென்ற எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இந்தக் கப்பலை தங்களுடைய கடத்தல் முயற்சிக்கு பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 15-ஆம் தேதி இந்திய கடற்கரையிலிருந்து, 2 ஆயிரத்து 800 கிலோமீட்டர் தொலைவில் கடற்கொள்ளையர் கடத்திய எம்.வி.ரூயென் கப்பல் சென்று கொண்டிருப்பதை இந்திய கடற்படை கண்டுபிடித்தது.
இதனைத் தொடர்ந்து, கப்பலை மீட்க இந்திய கடற்படை அதிரடியாக களத்தில் இறங்கியது. கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை மீட்கும் நடவடிக்கையில், கடல் ரோந்து விமானம் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா கப்பல்களை சி-17 விமானம், ஹெலிகாப்டர் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.
பின்னர், சரக்கு கப்பலை சுற்றிவளைத்து கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, திடீரென இந்திய ஹெலிகாப்டர் மீது கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
Swift response by #IndianNavy's Mission Deployed warship ensures safe release of hijacked vessel & crew.#INSSumitra, on #AntiPiracy ops along East coast of #Somalia & #GulfofAden, responded to a distress message regarding hijacking of an Iranian flagged Fishing Vessel (FV)… pic.twitter.com/AQTkcTJvQo
— SpokespersonNavy (@indiannavy) January 29, 2024
சரணடையாவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய கடற்படை எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, கப்பல் சுற்றி வளைக்கப்பட்டதால், வேறு வழியின்றி கடற்கொள்ளையர்கள், இந்திய கடற்படையிடம் சரணடைந்தனர்.
பின்னர், கப்பலில் இருந்த 35 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டார்கள். கப்பல் ஊழியர்கள் 17 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் 100 நாட்களுக்கும் மேலாக கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்தனர். தற்போது மால்டா நாட்டின் சரக்கு கப்பல் இந்திய கடற்படையிடம் உள்ளது.
கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை :
சோமாலியாவை சேர்ந்த கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 பாகிஸ்தானியர்களை இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா மீட்டது.
கடற்கொள்ளையர்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளுக்காக சோமாலியா மற்றும் ஏடன் வளைகுடா கடல் பகுதிகளில் ஐ.என்.எஸ். சுமித்ரா போர்க்கப்பல் பணியமர்த்தப்பட்டுள்ளது.
கடற்கொள்ளையர்கள் பயணிகளை பணயக்கைதிகளாக வைத்திருந்தனர். இந்திய போர்க்கப்பல் வெற்றிகரமாக படகையும் படகில் இருந்து 19 பாகிஸ்தானியர்களையும் 11 சோமாலிய கொள்ளையர்களிடம் மீட்டது.
அல் நயீமி கப்பலை மீட்ட இந்திய கடற்படை :
ஜனவரி 29 ஆம் தேதி இரானைச் சேர்ந்த மீன்பிடி படகை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து சம்பந்தப்பட்ட கப்பலை மீட்க ஐ.என்.எஸ். சுமித்ரா சென்றது.
அங்கே, கடற்கொள்ளையர்களிடம் சண்டையிட்டு மீன்பிடி படகையும் படகில் இருந்த 17 பேரையும் இந்திய கடற்படை மீட்டது.
#IndianNavy’s Swift Response to the Hijacking Attempt of MV Lila Norfolk in the North Arabian Sea.
All 21 crew (incl #15Indians) onboard safely evacuated from the citadel.Sanitisation by MARCOs has confirmed absence of the hijackers.
The attempt of hijacking by the pirates… https://t.co/OvudB0A8VV pic.twitter.com/616q7avNjg
— SpokespersonNavy (@indiannavy) January 5, 2024
இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சில மணி நேரங்களில் இரானைச் சேர்ந்த அல் நயீமி (Al Naeemi) எனும் மற்றொரு மீன்பிடி படகையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியிருப்பதாக ஐ.என்.எஸ். சுமித்ரா போர்க்கப்பலுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து கொச்சியில் இருந்து கிட்டத்தட்ட 850 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள இடத்தில் கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த அப்படகை மீட்க ஐ.என்.எஸ். சுமித்ரா போர்க்கப்பல் விரைந்தது.
மால்டோவா நாட்டின் கப்பலை மீட்ட இந்திய கடற்படை :
மால்டோவா நாட்டுக்கு சொந்தமான எம்வி ருயின் என்ற சரக்கு கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. அந்த சரக்கு கப்பலில் 18 மாலுமிகள் பயணித்தனர்.
இந்த கப்பல் கடத்தப்பட்ட போது ஏடன் வளைகுடாவில் இந்திய போர் கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. இதனையடுத்து எம்வி ருயின் சரக்கு கப்பலை மீட்க போர்க் கப்பல்களும் விமானங்களும் களத்தில் இறங்கின. இந்த கடத்தலின் போது படுகாயமடைந்த மாலும் ஒருவரை இந்திய கடற்படை மீட்டது.
15 இந்திய மாலுமிகளுடன் எம்வி லைலா நோர்ஃபோக் என்ற சரக்கு கப்பல் சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. லைபீரியா நாட்டு கொடியுடன் வந்த இந்த சரக்கு கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.
இந்தக் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து ஐ.என்.எஸ். சென்னை போர்க் கப்பல், கடற்படை விமானங்கள் உடனடியாக கடத்தப்பட்ட கப்பல் இருப்பிடத்தை நோக்கி விரைந்தது.
மேலும் கடத்தப்பட்ட இந்திய மாலுமிகளைத் தொடர்பு கொண்டு கடற்படையினர் பேச்சுவார்த்தை நடத்தியது. தொடந்து எச்சரிக்கை கொடுத்து கப்பலுக்குள் புகுந்த கடற்படையினர் கப்பலை மீட்டனர். 15 இந்திய மாலுமிகளும் பிலிப்பைன்சை சேர்ந்த 6 பேரும் பத்திரமாக மீட்டனர்.
சோமாலியா என்றால் என்ன ? யார் அவர்கள் ?
சோமாலியா என்பது ஆப்பிரிக்காவின் ஹார்ன் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். மேற்கில் எத்தியோப்பியா, வடமேற்கில் ஜிபூட்டி, வடக்கே ஏடன் வளைகுடா, கிழக்கே இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கில் கென்யா ஆகியவற்றின் எல்லைகளாகவும் சோமாலியா உள்ளது.
அங்கு சுமார் 15 மில்லியன் மக்களைக் வாழ்ந்துவருகின்றனர், இதில் முக்கியமாக சோமாலியர்கள் உள்ளனர், அது ஒரு இஸ்லாமியா நாடாகும். அங்கு அரபு அதிகாரப்பூர்வ மொழியாகும்.
சோமாலியாவில் 1991 ஆம் ஆண்டு அதிபர் சியாட் பாரே அகற்றப்பட்டதிலிருந்து அரசியல் உறுதியற்ற தன்மையையும் மோதலையும் கொண்ட நாடக மாறியுள்ளது.
இது வறுமை, போதிய உள்கட்டமைப்பு இல்லாமை, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அடிப்படை தேவைகள் இல்லாமல் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார சவால்களை விளைவித்துள்ளது.
அதுமட்டுமின்றி நாடுகளுக்கிடையேயான மோதல்கள் மற்றும் அல்-ஷபாப் போன்ற பயங்கரவாத குழுக்களின் இருப்பு ஆகியவற்றால் அந்நாடு பாதிக்கப்பட்டுள்ளது.
சோமாலியாவில் கடல் கொள்ளை :
பொருளாதார விரக்தி, திறமையான நிர்வாகம் இல்லாததால், கொள்ளையடிப்பு ஒரு இலாபகரமான வணிகமாக அங்கு நடைபெற்று வருகிறது.
சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஏடன் வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் வழியாக செல்லும் கப்பல்களை கடத்திச் சென்றனர். பின்னர் கடத்தி சென்ற கப்பல்கள் மற்றும் பணியாளர்களை விடுவிப்பதற்காக அதிக பணம் செலுத்துமாறு கோரினர்.
இப்பகுதியில் கடற்கொள்ளையானது சர்வதேச வர்த்தகம், கடல்வழி போக்குவரத்து மற்றும் கடற்பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்துக்களை ஏற்படுத்தியது.
இது கப்பல் நிறுவனங்களுக்கான காப்பீட்டு செலவுகளை அதிகரித்தது மேலும் முக்கிய விநியோக வழிகளை சீர்குலைத்தது. மேலும், கடற்கொள்ளையுடன் தொடர்புடைய வன்முறை, பணயக்கைதிகள் மற்றும் கடற்படைப் படைகளுடன் அவ்வப்போது மோதல்கள் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமைந்தது.
சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிரச்சனை 2010-2012 ஆம் ஆண்டு உச்சத்தை எட்டியது. பின்னர் ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு படிப்படியாக அதைக் குறைத்தது.