2024 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 -ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம், 2024-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலுக்கான, வேட்பு மனு தாக்கல் செய்வது குறித்து நெறிமுறை வெளியிட்டுள்ளது.
அதில், மக்களவை தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது, வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்பு மனு பெற்றுக் கொள்ளப்படும்.
மனுத்தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து நூறு மீட்டருக்குள் இரண்டு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
மனுத்தாக்கல் நடைபெறும் நாட்களில் மாலை 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் யாருக்கும் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.