2023-ஆம் ஆண்டுக்கான உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில், முதலிடத்தில் வங்கதேசமும், இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்று தரத் தொழில்நுட்ப நிறுவனமான ஐ.கியு.ஏர் நிறுவனம், உலகம் முழுவதும் காற்றின் தரம் தொடர்பான புள்ளிவிவரப் பட்டியலை வெளியிடுகிறது. அந்த வகையில், 2023-ஆம் ஆண்டுக்கான உலகக் காற்றுத் தர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
134 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகிலேயே மாசுபட்ட தலைநகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. அங்கு காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது.
காற்று மாசு மிகவும் மோசமான பெருநகரங்களில் பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் நகரம் முதலிடத்தில் உள்ளது.
உலகில் மாசுபட்ட நாடுகளின் பட்டியலைப் பொருத்தவரை, வங்கதேசம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. இந்தப் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.