தொழில்நுட்ப மேம்பாடு, புதுமை கண்டுபிடிப்புகளுக்கான தீர்வுகள் மற்றும் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதில் இந்திய கடற்படை மற்றும் காரக்பூர் இந்திய தொழில்நுட்ப கழகம் இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய கடற்படை மற்றும் காரக்பூர் இந்திய தொழில் நுட்பக் கழகம் ஆகியவற்றின் குழுக்கள் வளர்ச்சி முன்னெடுப்பு, கூட்டு ஆராய்ச்சியில் கவனம் செலுத்துகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் லோனாவாலாவில் உள்ள இந்தியக் கடற்படைக் கப்பல் சிவாஜி மூலம் ஒருங்கிணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.