அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. இதில், தமிழகத்தில் 16 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.