வேலூர் திமுக மாநகர மாவட்ட திமுக பொருளாளராகவும், வேலூர் மாவட்ட அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவராகவும் உள்ள அசோகன் என்பவரது வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
வேலூர் கூடுதல் கமிஷனர் பூரணசந்தர் தலைமையில் 4 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், அசோகனுக்குச் சொந்தமான தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள பிரிண்டிங் பிரஸ் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது. இதனையடுத்து, சோதனை முடிந்து அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிப்பு வெளியிடப்பட்டவில்லை. மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், வருமானவரித்துறை ரெய்டு நடத்தியது திமுக நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.