தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் குமார் சுற்றுலா சென்ற போது தனது நண்பர்களுக்கு பிரியாணி செய்து கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தையும் இயக்கியுள்ளார்.
அஜித் சினிமா நடிப்பு மட்டுமின்றி, புகைப்படம் எடுத்தல்,கார்கள், பைக்குகள் ஓட்டுதல் மற்றும் சமையல் உள்ளிட்டசெயல்பாடுகளில் மிக ஆர்வம்உள்ளவர்.
மேலும் சிக்கன் பிரியாணி செய்வதில் ‘ஸ்பெஷலிஸ்ட்’ . அவரது ருசியான பிரியாணி பலரையும்ஆச்சரிய படுத்தி உள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது மத்திய பிரதேசத்தில் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்று உள்ளார்.
அங்கு ஒரு அடர்ந்த காட்டில் நடிகர் அஜித் கேஸ் அடுப்பில் ஒரு அண்டாவில் சிக்கன் பிரியாணி சமைத்து அவரது நண்பர்களுக்கு வழங்கி மகிழ்ந்து உள்ளார். தற்போது அந்த பிரியாணி சமையல் வீடியோ, புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.
மேலும் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதனை ரசிகர்கள் பார்த்து வியப்படைந்து வருகின்றனர்
நடிகர் அஜித் சிக்கன் பிரியாணி தயாரிப்பதில் வல்லவர். அவர் தயாரித்த பிரியாணியை சாப்பிட்ட பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அதனை பாராட்டி உள்ளனர். நிறையப் பிரபலங்கள் அஜித் பிரியாணியை புகழ்ந்தும் கூறியுள்ளனர்.