தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரரான சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலுக்கு சென்று குழந்தை ராமரை வழிபட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.
அதேபோல் இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும், நடிகர்களும் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரரான சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜ் அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலுக்கு சென்று குழந்தை ராமரை வழிபட்டுள்ளார்.
2024 ஐபிஎல் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் லக்னோ அணிக்காக விளையாடும் அவர் போட்டிக்கு முன்னதாக அயோத்தி ஸ்ரீ ராமரை வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.