அமலாக்கத்துறை கைது செய்யக்கூடாது : கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்த டெல்லி உயர் நீதிமன்றம்!
Sep 14, 2026, 07:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறை கைது செய்யக்கூடாது : கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்த டெல்லி உயர் நீதிமன்றம்!

Murugesan M by Murugesan M
Mar 21, 2024, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமலாக்கத்துறை தன்னை கைது செய்யக்கூடாது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை டில்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கலால் கொள்கை முறைகேட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பது தொடர்பான குற்றச்சாட்டில், விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு 8 முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

ஆனால் விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராகததால் டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. மார்ச் 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனைத்தொடர்ந்து  ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அவர் ஜாமீன் பெற்றார்.

இதனைத்தொடர்ந்து மற்றொரு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசாரணைக்கு ஆஜரானால் கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட் மற்றும் மனோஜ் ஜெயின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டோம். தற்போதைய நிலையில் மனுதாரருக்கு எந்த நிவாரணமும் கொடுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

எனினும் கெஜ்ரிவாலின் புதிய மனுவுக்கு பதிலளிக்குமாறு அமலாக்க இயக்குநரகத்திற்கு (ED) உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது இல்லத்திற்கு அமலாக்கத்துறையினர் விரைந்துள்ளனர்.

Tags: delhiaravind kejriwal
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தி ஸ்ரீ ராமரை தரிசனம் செய்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்!

Next Post

அமேசான் மழைக்காட்டில் அழிந்துப் போன டால்பின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies