சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் இரண்டாம் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் இன்று தொடங்கவுள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெறுகின்றன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
இன்றையப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் இரண்டாம் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் தனது இரண்டாவது போட்டியை மார்ச் 26 ஆம் தேதி விளையாடவுள்ளது. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைத்தனத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் ஜென்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே – ஜிடி அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் மூலம் நாளை விற்பனைக்கு வருகிறது.
அதன்படி நாளை காலை 10.30 மணிக்கு இந்த போட்டிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ளது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிக்கெட் விலை :
சி, டி, இ, ஸ்டாண்ட் கீழ் தளம் : ரூ.1,700
சி, டி, இ, ஸ்டாண்ட் மேல் தளம் : ரூ.3,500
ஐ, ஜெ, கே, ஸ்டாண்ட் மேல் தளம் : ரூ.2,500
ஐ, ஜெ, கே, ஸ்டாண்ட் கீழ் தளம் : ரூ.4,000
கே.எம்.கே. ஸ்டாண்ட் பால்கனி : ரூ.6,000