அமெரிக்கா, நிலவில் ரயில் பாதை அமைத்து மனிதர்களையும் , பொருட்களையும் நிலவின் மேற்பரப்பின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுவருகிறது.
அமெரிக்காவின் பாதுகாப்பு மேம்பட்ட ஆராய்ச்சி திட்ட முகமை ( DARPA ) நிலவில் ரயில் போக்குவரத்து அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளதாக அமெரிக்கா அறிவித்தது.
DARPA என்பது ஒரு யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மென்ட் ஏஜென்சி ஆகும். இது மேம்பட்ட தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பொறுப்பாகும்.
DARPA அமைப்பு அப்பல்லோ திட்டத்தின் மூலம் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்ல உதவிய பல தொழில்நுட்பங்களின் உந்து சக்தியாக இருந்துள்ளது. மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய அப்பல்லோ திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சாட்டர்ன் வி ராக்கெட்டிலும் இந்த அமைப்பின் பங்கு உள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த அமைப்பானது நிலவில் ரயில் பாதை அமைத்து மனிதர்களையும் , பொருட்களையும் நிலவின் மேற்பரப்பின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்காக நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் தற்போது புதிய ஆய்வை மேற்கொள்ளும் பொறுப்புகளை கொண்டுள்ளது.
அதன் படி இந்த நிறுவனம் முதலில், நிலவில் ரயில் அமைப்பு உருவாக்க தேவைப்படும் வளங்களை வரையறுக்க உள்ளது . பின்னர், அதற்கு தேவைப்படும் செலவுகள், தொழில்நுட்பங்கள் குறித்து பட்டியலையும் தயார் செய்யவுள்ளது.
அதன் பிறகு, நிலவில் முழுமையாக இயங்கும் ரயில் அமைப்பின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பின் மாதிரிகளைசெய்யவுள்ளது.
அதனுடன், ரயில் பாதை கட்டமைக்க தேவையான கிரேடிங் மற்றும் ஃபவுண்டேஷன் தயாரித்து, டிராக் பிளேஸ்மென்ட் சீரமைப்பு, பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு உள்ளிட்டவற்றை ரோபாட்டிக்ஸ் மூலம் உருவாக்கி ரயிலை இயக்குவதற்காகவும் ஆராய்ச்சி செய்யவுள்ளது.