மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை தமாகா வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர்,தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோட்டில் விஜயகுமாரும், ஸ்ரீபெரும்புதூரில் வி.என். வேணுகோபாலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.