தமிழக பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில், திருவள்ளூர் (தனி)- V. பாலகணபதி, வட சென்னை -R.C. பால் கனகராஜ், திருவண்ணாமலை -A. அஸ்வத்தாமன், நாமக்கல் – கே.பி.ராமலிங்கம், திருப்பூர் – A.P. முருகானந்தம், பொள்ளாச்சி – K வசந்தராஜன், கரூர் – V.V. செந்தில்நாதன், சிதம்பரம் (தனி) -P. கார்த்தியாயினி, நாகப்பட்டினம் (தனி) – S.G.M. ரமேஷ், தஞ்சை – M. முருகானந்தம், சிவகங்கை – தேவநாதன் யாதவ், மதுரை – பேராசிரியர். ராம சீனிவாசன், விருதுநகர் – ராதிகா சரத்குமார், தென்காசி -B. ஜான் பாண்டியன் மற்றும் புதுச்சேரியில் நமச்சிவாயம் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் வெளியாகியுள்ள பாஜக வேட்பாளர்கள், திமுக வேட்பாளர்களுடன் யார்-யார் நேரடியாக மோதுகிறார்கள் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
இதில், வட சென்னையில் பாஜக சார்பில் போட்டியிடும் R.C. பால் கனகராஜ்- திமுகவின் கலாநிதி வீராசாமியை எதிர்கொள்கிறார்.
திருவண்ணாமலையில் பாஜக சார்பில் A. அஸ்வத்தாமனும், திமுக சார்பில் அண்ணாதுரையும் களம் காண்கிறார்கள்.
பொள்ளாச்சியில் பாஜக சார்பில் K. வசந்தராஜனும், திமுக சார்பில் ஈஸ்வரசாமியும் போட்டியிடுகின்றனர்.
தஞ்சையில் பாஜக சார்பில் M. முருகானந்தமும், திமுக சார்பில் முரசொலியும் மோதுகின்றனர்.
தென்காசி தொகுதியில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தாமரை சின்னத்திலும், திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.