ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த முக்கிய சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜம்பா, நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் இன்று தொடங்கவுள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெறுகின்றன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
இன்றையப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த முக்கிய சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜம்பா, நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரரான அவரை ராஜஸ்தான் அணி ரூ.1.5 கோடிக்கு தக்க வைத்திருந்தது.
இந்நிலையில் தற்போது அவருக்குப் பதிலாக மாற்று வீரராக இந்தியாவைச் சேர்ந்த தனுஷ் கோட்யான் அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது போட்டியை வரும் 24 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.