விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக சார்பில் வி.எஸ். நந்தினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
விளவங்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் விஜயதரணி. இவருக்கு காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டது. இதன் காரணமாகத் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடா்ந்து, பேரவைச் செயலகத்தின் பரிந்துரையை ஏற்று அந்த தொகுதி காலியானதாகத் தோ்தல் ஆணையம் அறிவித்தது.
2024 மக்களவைத் தோ்தல் உடன், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வரும் ஏப். 19-ம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வி.எஸ். நந்தினி போட்டியிடுவார் என பாஜக தேசிய தலைமை அறிவித்துள்ளது.
விளவங்கோடு பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக ராணி என்ற பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.