இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் இன்று தொடங்கவுள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெறுகின்றன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
இன்றையப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நேற்று ஐபிஎல் தொடரின் அனைத்து கேப்டன்களையும் ஒன்றிணைத்து கோப்பையுடன் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் இருந்தார்.
பின்னர் அதிகாரபூர்வமாக ருத்ராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது. இந்நிலையில் தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்ராஜ் தனது கேப்டன் பதவியை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ” சிஎஸ்கே அணியின் கேப்டனாக பதவி கிடைத்ததை நான் பெருமையாக நினைக்கின்றேன். ஆனால் அதைவிட எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.
எனினும் இந்த வாய்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஏனென்றால் எங்களது அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் நான் பெரிய விஷயங்களை செய்ய தேவையில்லை.
அது மட்டுமல்லாமல் எங்கள் அணியில் தோனி இருக்கிறார். ஜடேஜா மற்றும் ரகானே ஆகியோரும் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் கேப்டனாக இருந்திருக்கிறார்கள்.
இந்த மூன்று வீரர்களும் என்னை நிச்சயமாக வழி நடத்துவார்கள். இதனால் நான் எதை நினைத்தும் கவலைப்படவில்லை. இந்த பொறுப்பை நான் மகிழ்ச்சியாக அனுபவிக்க விரும்புகிறேன் என்று ருதுராஜ் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் இதுபோல் கேப்டன் மாற்றப்பட்டபோது சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது. இந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் சிஎஸ்கே, தோனி ஆகியோர் தெளிவாக உள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ருத்ராஜ் கெய்க்வாட் கேப்டனை செயல்பட்டு கோப்பையை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.