மியூசிக் அகாடமியின் புனிதத்தை பராமரிக்க பலர் பாடுபடுகிறார்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
ஒன்பது தசாப்தங்களுக்கும் மேலாக கர்நாடக இசை மற்றும் ஆன்மீக உணர்வின் ஆலயமாகப் போற்றப்படும் மியூசிக் அகாடமி, அமைப்பின் புனிதத்துக்குக் கேடு விளைவிக்கும் பிரிவினை சக்திகளால் சிதைவடைந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
The Music Academy, revered as the Temple of Carnatic Music and spiritual consciousness for more than nine decades, is under the threat of disintegration by divisive forces detrimental to the sanctity of the organisation.@BJP4TamilNadu stands in solidarity with all the eminent…
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 22, 2024
அகாடமியின் தற்போதைய அதிகாரத்தின் விரோத அணுகுமுறைக்கு எதிராக கூட்டாக குரல் எழுப்பிய புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் தமிழக பாஜக துணை நிற்கிறது. பலர் பழமையான நிறுவனத்தின் புனிதத்தை பராமரிக்க பாடுபடுகிறார்கள்.
செயலிழந்த பிரச்சாரம், வெறுப்பு, பிரிவினையின் சித்தாந்தத்தின் ஆதரவாளர்களின் கடைசி புகலிடம் கர்நாடக இசைக் கோவிலாக இருக்க முடியாது! எனத் தெரிவித்துள்ளார்.