2024 மக்களவை தேர்தலையொட்டி, கடந்த 20 -ம் வேட்புமனு தாக்கல் தொடங்கிது. இதனையொட்டி, தூத்துக்குடி தொகுதியில் கடந்த 20 -ம் தேதி சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இரண்டாவது நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில், மூன்றாவது நாளான நேற்று , தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட நாம் இந்தியர் கட்சி வேட்பாளர் ஜெயகணேஷ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதேபோல, சுயேட்சை வேட்பாளர் ஜெயகுமார் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுவரை தூத்துக்குடி தொகுதியில் 4 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.