வெங்காயம் மீதான ஏற்றுமதி தடையை மறு உத்தரவு வரும் வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
உள்நாட்டில் வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தடை விதித்திருந்தது.
இந்நிலையில் வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை மறு உத்தரவு வரும் வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடை நீட்டிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஆசியாவின் வெங்காய ஏற்றுமதியில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக, இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகிறது. கடந்த மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த நிதியாண்டில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக இந்தியாவிலிருந்து 2.5 மில்லியன் மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.