‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ படம் வெளிவந்த ஒரே நாளில் ரூ. 1.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய படம் தான் ‘ஸ்வாதந்த்ரிய வீர் சாவர்க்கர்’. ரன்தீப் ஹூடா இயக்கி நடித்துள்ள இப்படத்தின் திரைக்கதையை ரன்தீப் மற்றும் உட்கார்ஷ் நைதானி ஆகியோர் எழுதியுள்ளனர்.
இந்த படத்தை ரன்தீப் ஹூடா ஃபிலிம்ஸ், ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ், லெஜண்ட் ஸ்டூடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. மார்ச் 5 ஆம் தேதி இந்த படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் நேற்று திரையரங்கில் வெளிவந்தது.
“அகிம்சை மூலம் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று நாம் அனைவரும் படித்திருக்கிறோம், ஆனால் இது அந்தக் கதை அல்ல” என்று கருத்தோடு, சிறையில் சாவர்க்கர் பட்ட துன்பங்கள் இப்படத்தில் காட்டப்படுகின்றன.
இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வந்துள்ளது. அதன்படி இப்படம் நேற்று ஒரு நாளில் ரூ. 1.25 கோடி வசூல் செய்துள்ளது. வரும் நாட்களில் இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.