2024 ஐபிஎல் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!
Mar 15, 2026, 11:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!

Murugesan M by Murugesan M
Mar 24, 2024, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியில் ஹைதராபாத் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.

இந்த தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இதன் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடியது.

இந்த போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதை தொடந்து நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக ஆன்ட்ரே ரசல் 3 பௌண்டரீஸ் மற்றும் 7 சிக்சர்கள் என மொத்தமாக 25 பந்துகளில் 64 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோருக்கு பெரும் பங்காற்றினார்.

அதேபோல் கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய பிலிப் சால்ட் 54 ரன்களும், ராமண்டின் சிங் 35 ரன்களும் எடுத்தனர்.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக தமிழக வீரரான நடராஜன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபோல் மயங்க மார்கண்டே 2 விக்கெட்களும், பட் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதை தொடந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் மற்றும் அபிஷேக் ஷர்மா தலா 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழக்க எய்டென் மார்க்ரம் 18 ரங்களில் ஆட்டமிழந்து சென்றார். அப்போது களமிறங்கிய ஏய்ன்றிச் கிளாசென் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக 8 சிக்சர்கள் என மொத்தமாக 29 பந்துகளில் 63 ரன்களை எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இறுதியாக 3 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அப்போது ஹர்ஷித் ராணா அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி 4 ரன்கள் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற செய்தார்.

இறுதியாக கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது கொல்கத்தா அணியின் ஆன்ட்ரே ரசலுக்கு வழங்கப்பட்டது.

Tags: csk2024 IPL2024 lPL match
ShareTweetSendShare
Previous Post

அசாம் ரைபிள்ஸ் படை எழுச்சி நாள்! – அமித்ஷா வாழ்த்து!

Next Post

கர்நாடகா மாநிலத்திற்கு ஒவ்வொரு பைசாவும் சரியான நேரத்தில் வழங்கப்படுகிறது!- நிர்மலா சீதாராமன்

Related News

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies