கர்நாடகா மாநிலம் வறட்சி நிவாரண நிதி தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கர்நாடகாவுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஒவ்வொரு பைசாவும் சரியான நேரத்தில் வழங்கப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
கர்நாடகாவுக்கான அனைத்து நிலுவைத் தொகையையும் மத்திய அரசு செலுத்தியுள்ளது என்றும், 2014 முதல் 2024 வரை 258 சதவீதம் வரிப் பகிர்வு அதிகரித்துள்ளது என்றும், இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 3.5 மடங்கு அதிகம் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.
“கர்நாடகாவுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஒவ்வொரு பைசாவும் மாநில அரசுக்கு உரிய நேரத்தில் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.
2014 முதல் 2024 வரை வரிப் பகிர்வு 258% அதிகரித்துள்ளது, இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 3.5 மடங்கு அதிகம். மாநிலங்களுக்கான மானியங்கள் 273% அதிகரித்துள்ளது. இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் வழங்கியதை விட 3.7 மடங்கு அதிகம். 2004-2014 க்கு இடையில், கர்நாடகாவுக்கு ஆண்டுக்கு வழங்கப்பட்ட பணம் ரூ. 81,795 கோடியாக வரிப் பகிர்வாக இருந்தது. 2014-2024 க்கு இடைப்பட்ட காலத்தில் மாநிலத்திற்கு செலுத்தப்பட்ட வரி பகிர்வு கிட்டத்தட்ட 2.93 லட்சம் கோடிகள்,” என்று நிதியமைச்சர் மேலும் கூறினார்.