2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெறும் மைதானம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துக் கொண்டுள்ளன.
இந்த தொடருக்கான அட்டவணையில் வெளியிடப்பட்டது. அதில் முதல் 21 போட்டிக்கான அட்டவணை மட்டுமே இருந்தது. மற்ற போட்டிகளுக்கான அட்டவணை நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறும் மைதானம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றின் எலிமினேட்டர் போட்டி மற்றும் முதல் தகுதிச் சுற்றுப் போட்டிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலும், இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டி மற்றும் ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற உள்ளதாக பிசிசிஐ-யிடம் இருந்து தகவல் வந்துள்ளது.
முன்னதாக ஒரு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது கடைசி போட்டியை சென்னை சேப்பாக் மைதானத்தில் தான் விளையாடுவேன் என்று கூறியிருந்தார்.
அதன்படி இந்த முறை இறுதிப் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. மேலும் முதல் போட்டிக்கு முன்னதாக தோனி தனது கேப்டன் பதவியை ருத்ராஜிடம் ஒப்படைத்தார். இதை எல்லாம் வைத்து பார்க்கும் பொது இதுவே தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்று பார்க்கப்படுகிறது.