விமானப்படை முன்னாள் தளபதி பதவுரியா பாஜகவில் இணைந்தார்.
இந்திய விமானப்படையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர் பதவுரியா. விமான படை தளபதியாகவும் பணியாற்றினார். இவர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீண்டும் ஒருமுறை தேசத்தைக் கட்டியெழுப்ப இந்த வாய்ப்பை வழங்கிய கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்தார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய விமானப்படையில் பணியாற்றியுள்ளதாவும், ஆனால் கடந்த 8 ஆண்டுகள் தான் தனது பணியின் சிறந்த காலம் என்றும் அவர் கூறினார்.
நமது படைகளை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், அவர்களைத் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றவும் மத்திய அரசாங்கம் எடுத்த கடுமையான நடவடிக்கை வீரர்களிடம் புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாக தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பில் அரசு எடுத்து வரும் நடவடிக்கை மிகவும் முக்கியமானவை என்றும், உலக அளவில் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றும் பதவுரியா கூறினார்.