கர்நாடகா மாநிலத்தில் பாஜக 25 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 26 மற்றும் மே மாதம் 7-ந் தேதி என இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜகவுடன் முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இதில் அக்கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மண்டியா, கோலார், ஹாசன் ஆகிய 3 தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த உள்ள 28 இடங்களில் பாஜக 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது.