2024 ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.
இந்த தொடரின் மூன்றாம் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றுவருகிறது.
இதை தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார்.
அதேபோல், குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இன்று முதல்முறையாக களமிறங்க உள்ளது. இதனால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மும்பை மற்றும் குஜராத் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளன.
குஜராத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் மும்பை அணி அதிகபட்சமாக 218 ரன்களையும், குறைந்தபட்சமாக 152 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
அதேபோல், மும்பை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் குஜராத் அணி அதிகபட்சமாக 233 ரன்களையும், குறைந்தபட்சமாக 172 ரன்களையும் பதிவு செய்துள்ளது.