ஹோலி பண்டிகை அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலையும் புதிய உற்சாகத்தையும் கொண்டு வரட்டும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வடமாநிலங்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகையாகும். இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஹோலி பண்டிகை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
देश के मेरे सभी परिवारजनों को होली की अनेकानेक शुभकामनाएं। स्नेह और सद्भाव के रंगों से सजा यह पारंपरिक पर्व आप सभी के जीवन में नई ऊर्जा और नया उत्साह लेकर आए।
— Narendra Modi (@narendramodi) March 24, 2024
நாட்டில் உள்ள எனது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஹோலி நல்வாழ்த்துக்கள்.
பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த பாரம்பரிய திருவிழா உங்கள் அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலையும் புதிய உற்சாகத்தையும் கொண்டு வரட்டும் எனத் தெரிவித்துள்ளார்.