சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கும், சென்னையில் இருந்து இருந்து காட்பாடி வழியாக திருவண்ணாமலைக்கும் இரண்டு இரயில்கள் தினமும் இயக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நினைத்தாலே முக்தி தரக் கூடியது திருவண்ணாமலை திருக்கோவில். அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் என அழைக்கப்படும் திரு அருணாசலேசுவரர் திருக்கோயில் தென் இந்தியாவில் புனிதமான நகரமானதும், திருவண்ணாமலை 2668 அடி உயரம் கொண்ட மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது
வெள்ளிக்கிழமை, விடுமுறை தினங்கள் மற்றும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினம் அன்று திருவண்ணாமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இதனால், பக்தர்கள் நலன் கருதி, மூன்று சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த சிறப்பு இரயில்கள் அனைத்தம் டிசம்பர் 2023 உடன் முடிவடைந்துவிட்டது. இதனால், ஜனவரி 2024 முதல் சிறப்பு இரயில்கள் இயக்கப்படவில்லை.
பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு தொடர்ந்து சிறப்பு ரயில்கள் இயக்க வரும் ஏப்ரல் மாதம் முதல் சிறப்பு இரயில்களுக்கான அட்டவணை வெளியிட வேண்டும் என இரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், திருவண்ணாமலைக்கு பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு தினசரி இரயில்கள் இயக்க வலியுறுத்தி ஒரு லட்சம் நபர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. அவ்வாறு பெற்றப்பட்ட கையெத்து விண்ணப்பத்தை தெற்கு இரயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.