கோவையில் குடிநீர் தட்டுப்பாடு கள்ள மௌனம் காக்கும் திமுக! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Mar 15, 2026, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் குடிநீர் தட்டுப்பாடு கள்ள மௌனம் காக்கும் திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Mar 25, 2024, 10:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோயம்புத்தூரில் நிலவும் குடி நீர்ப் பற்றாக்குறையைச் சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் திமுக அரசு எடுக்க வேண்டும் எனப் பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி மற்றும் பில்லூர் அணைத் திட்டங்கள். சிறுவாணி தண்ணீர், கோயம்புத்தூரின் குடிநீர் தேவைக்காகவும், பில்லூர் அணையிலிருந்து பெறப்படும் தண்ணீர், குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. சிறுவாணி அணையிலிருந்து பெறப்படும் குடிநீர், கோவையின் 7 நகராட்சிகளுக்கும், 28 ஊராட்சிகளுக்கும், கோவை மாநகராட்சியின் ஒரு பகுதிக்கும் பயன்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும், கோடைக் காலத்தில், இந்த அணைகளில், நீர்மட்டம் -டம் குறைவதும், அதனால் பொதுமக்கள் அவதிப்படுவதும் வாடிக்கையாகியிருக்கிறது. இந்த ஆண்டும், சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகளில் நீர்மட்டம் குறைந்திருப்பதால், கோயம்புத்தூர் பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவிவருகிறது.

எந்தவித தொலை நோக்குச் சிந்தனையும் இல்லாத திமுக அரசு, குடிநீர்ப் பற்றாக்குறை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாததால், இந்த ஆண்டும் குடிநீர்ப் பஞ்சம் தொடர்கிறது.

சிறுவாணி அணையின் மொத்த நீர்த் தேக்க உயரம் 50 அடி நேற்றைய நிலவரப்படி, நீர்மட்டம் 18.10 அடியாக மட்டுமே உள்ளது. அதே போல, பில்லூர் அணையின் நீர்த் தேக்க உயரம் 100 அடியாகும்.

நேற்றைய நிலவரப்படி, 62.5 அடி உயர நீர்மட்டமே உள்ளது. பில்லூர் 1,2,3 திட்டங்களுக்கு, தினமும் 40 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கேரளா மாநிலம் முத்திக்குளம் என்ற பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு, கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது. அங்கிருந்து பவானி ஆறாக, பில்லூர் அணைக்கு வருகிறது. இங்கிருந்துதான், அத்திக்கடவு மற்றும் பவானி சாகர் அணை வரை தண்ணீர் செல்கிறது.

இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், திமுகவின் கூட்டணிக் கட்சியான கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே,
நெல்லிப்பதி என்ற இடத்தில், விதிகளை மீறி, சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய செய்தி வெளியானது.

சுமார் 90% தடுப்பணை பணிகள் முடிவடைந்ததும், மேலும் இரண்டு தடுப்பணைகள் கட்ட, கேரள கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருப்பதும் தெரியவந்தது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே, கேரள கம்யூனிஸ்ட் கட்சி கட்டி வரும் தடுப்பணைகளால், கோடைக் காலத்தில், பில்லூர் அணைக்கு வரும் நீர்மட்டம் குறையும் என்றும், இதனால், கோயம்புத்தூர் மக்களுக்கு
குடிநீர்ப் பற்றாக்குறையும், விவசாயிகளுக்கு பாசன நீர் வரத்து குறையும் என்றும், கடந்த ஆண்டே, பொதுமக்களும், விவசாயப் பெருமக்களும் அச்சம் தெரிவித்தும், தங்கள் இந்தி கூட்டணி நலனுக்காக, இதைக் குறித்து கேரள கம்யூனிஸ்ட் அரசிடம் எதுவும் பேசாமல், தடுப்பணைகள் கட்டும் முடிவைக் கைவிட வலியுறுத்தாமல், கோயம்புத்தூர் மக்கள் நலனுக்கு விரோதமாக திமுக அரசு செயல்பட்டதன் விளைவு, இந்த ஆண்டு கோடைக்காலம்
வரும் முன்னரே, கோயம்புத்தூரில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது.

உடனடியாக, திமுக அரசு, கோயம்புத்தூரில் நிலவும் குடி நீர்ப் பற்றாக்குறையைச் சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், சிறுவாணி ஆற்றின் குறுக்கே, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு கட்டியுள்ள தடுப்பணைகளின் தற்போதைய நிலை என்ன என்பதையும் தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், தங்கள் இந்தி கூட்டணிக் கட்சி நலனுக்காக, தமிழக மக்கள் நலனை பலி கொடுக்காமல், கேரள கம்யூனிஸ்ட் அரசு, மேலும் புதிய தடுப்பணைகள் கட்டாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaikovai
ShareTweetSendShare
Previous Post

கணியம்பூண்டியில் வாக்கு சேகரித்த எல்.முருகன்!

Next Post

ஹோலி பண்டிகை: குடியரசுத் தலைவர் வாழ்த்து!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies