தமிழ் வழிபாட்டு நெறிகளை உலக அளவில் கொண்டு செல்லும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருபவர் பேரூர் ஆதீனம் தவத்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பேரூர் ஆதீனம் தவத்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளாரிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று ஆசி பெற்றார்.
இது குறுத்து தனது எக்ஸ் பதிவில்,
வணக்கத்திற்குரிய பேரூர் ஆதீனம் தவத்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களைச் சந்தித்து வணங்கி ஆசி பெற்றேன்.
இன்றைய தினம், வணக்கத்திற்குரிய பேரூர் ஆதீனம் தவத்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களைச் சந்தித்து வணங்கி ஆசி பெற்றேன்.
தமிழ் வழிபாட்டு நெறிகளை உலக அளவில் கொண்டு செல்லும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டும், நூற்றுக்கணக்கான திருக்கோவில்களில், திருநெறிகளை நடத்தி, வழிபாட்டு… pic.twitter.com/amCchxMaVh
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 25, 2024
தமிழ் வழிபாட்டு நெறிகளை உலக அளவில் கொண்டு செல்லும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டும், நூற்றுக்கணக்கான திருக்கோவில்களில், திருநெறிகளை நடத்தி, வழிபாட்டு முறைகளோடு, தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் அரும்பணிகள் மேற்கொண்டு வரும் தவத்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.