ஹோலி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில், ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தும், கலர் பொடிகளைத் தூவியும், திலகமிட்டும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
இந்நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
On the ocassion of the Festival of Colours, heartfelt wishes to all brothers & sisters across our Nation. Let the festival bring cheer and joy into the lives of the masses while it honours the colourful triumph of good over evil. Happy Holi! pic.twitter.com/cZBu1CFtJj
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 25, 2024
ஹோலி பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தீமையின் மீது நன்மையின் வண்ணமயமான வெற்றியைப் போற்றும் அதே வேளையில், திருவிழா வெகுஜனங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். இனிய ஹோலி! எனக் குறிப்பிட்டுள்ளார்.