ஹோலியை முன்னிட்டு வண்ணப்பொடிகளை கொண்டு கடற்கரையில் மணல் சிற்பம் செதுக்கி அனைவர்க்கும் ஹோலி வாழ்த்தை கூறியுள்ளார் சுதர்சன் பட்நாயக்.
இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை தான் ஹோலி பண்டிகை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஹோலி பண்டிகையின் போது கலர் பொடிகளை தூவி விளையாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
இந்த நாளில் வாழ்த்தி கூறவேண்டும் என்றாலும் கூட பலரும் வண்ணப் பொடிகளை தூவி தான் தங்களின் ஹோலி வாழ்த்தை கூறுவார்கள்.
அந்த வகையில் ஒடிசாவை மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தனது ஹோலி வாழ்த்தை மணல் சிற்பம் மூலம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எந்த நிகழ்வு நடந்தாலும் அதற்காக மணல் சிற்பம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் சுதர்சன் பட்நாயக் இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு ராதா கிருஷ்ணரை மணலால் வடிவமைத்துள்ளார்.
அதற்கு கீழே வண்ண பொடிகளை கொண்டு ‘ஹாப்பி ஹோலி’ என்று எழுதியுள்ளார். மேலும் வண்ணங்களால் புள்ளிகளை வரைந்து கடற்கரையை வண்ணமையமாக மாற்றியுள்ளார்.