ஹோலி பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென் மாநிலங்களை விட, வட மாநிலங்களில் மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
மக்கள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தும், கலர் பொடிகளைத் தூவியும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். ஹோலி பண்டிகையை முன்னிட்டு, மத்திய அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
सभी देशवासियों को रंग व हर्षोल्लास के महापर्व होली की हार्दिक शुभकामनाएँ। खुशियों का यह रंगोत्सव आप सभी के जीवन में समृद्धि व सद्भाव का रंग लाए और नई ऊर्जा के संचार का माध्यम बने। pic.twitter.com/K6hZQLXCAG
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) March 25, 2024
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “ஹோலி பண்டிகையை முன்னிட்டு, அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வண்ணங்கள் மற்றும் மகிழ்ச்சியின் சிறந்த பண்டிகை ஹோலி. இந்த பண்டிகை அனைவரின் வாழ்விலும் செழிப்பை தரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.