ஹோலி பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென் மாநிலங்களை விட, வட மாநிலங்களில் மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஹோலி பண்டிகையை முன்னிட்டு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “மக்கள் அனைவருக்கும் ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள். இந்த வண்ணத் திருவிழா உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் புதிய ஆற்றலை தரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.