வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணங்களைப் பூசிக்கொண்டு, இனிப்புகளை வழங்கி பிறகு ஆரத்தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் மக்கள் எப்படி ஹோலி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்ப்போம். தமிழகத்தில் சென்னையில் உள்ள தீவுத்திடலில் மக்கள் ஒன்று கூடி வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி பாடல் போட்டி நடனமாடி மகிழ்ச்சியாக ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் மஹாராஷ்டிராவில் உள்ள ஜூகு கடற்கரையில் காலை முதலே பொது மக்கள் தங்களின் குடும்பங்களுடன் சென்று குழந்தைகளுடன் ஹோலி பண்டிகையை வண்ணப்பொடிகளை தூவி கொண்டாடிவருகின்றனர்.
புனேவில் குழந்தை அனைவரும் ஒன்றாக கூடி ஹோலி பண்டிகையை விளையாட்டுகளுடன் சேர்ந்து கொண்டாடி வருகின்றனர். ஒருவர் மேல் ஒருவர் வண்ணப்பொடிகளை தூவியும், தண்ணீர் துப்பாக்கியில் வண்ண தண்ணீரை கொண்டு ஒருவர் மீது ஒருவர் அடித்து ஆடல் பாடலுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் மாற்றுத்திறனாளிகளும் வண்ணப்பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர். அதேபோல் அசாம் மாநிலத்தில் பெண்கள் ஒருவர் மீது ஒருவர் பூக்களை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.