நாடுமுழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகைக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், கௌதம் கம்பிர், வீரேந்திர சேவாக் உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்.
இந்தியா முழுவதும் மக்கள் எப்படி ஹோலி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்ப்போம். தமிழகத்தில் சென்னையில் உள்ள தீவுத்திடலில் மக்கள் ஒன்று கூடி வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி பாடல் போட்டி நடனமாடி மகிழ்ச்சியாக ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
सभी को होली के इस खूबसूरत त्यौहार पर ढेर सारी खुशियाँ और रंगों की शुभकामनाएँ। आइए, हम सब मिलकर इसे यादगार बनाएं। होली और रंग पंचमी की हार्दिक बधाई। 🎨
Wishing everyone a very happy Holi!#Holi
— Sachin Tendulkar (@sachin_rt) March 25, 2024
அதேபோல் அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் தங்களின் ஹோலி வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது ஹோலி வாழ்த்தை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ” இந்த அழகான ஹோலி பண்டிகையில் அனைவருக்கும் மகிழ்ச்சியும் வண்ணங்களும் இருக்க வாழ்த்துக்கள். வாருங்கள், நாம் அனைவரும் சேர்ந்து இதை மறக்கமுடியாததாக மாற்றுவோம். ஹோலி மற்றும் ரங் பஞ்சமிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
Rang Barse !
Wishing you a Holi filled with love, laughter, and blessings.#HappyHoli pic.twitter.com/n0ygjRTREA— Virender Sehwag (@virendersehwag) March 25, 2024
இவரை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகருமான கௌதம் கம்பிர் தனது எக்ஸ் பக்கத்தில், ” அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துக்கள்! ” என வாழ்த்து கூறியுள்ளார்.
அதேபோல் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக் தனது எக்ஸ் பக்கத்தில், ” அன்பு, சிரிப்பு மற்றும் ஆசீர்வாதங்கள் நிறைந்த ஹோலி பண்டிகைக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
Wishing everyone a very happy & colourful Holi! #HappyHoli
— Gautam Gambhir (Modi Ka Parivar) (@GautamGambhir) March 24, 2024
பாரத நாடு முழுவதும் இன்று பொதுமக்கள் கோவிலுக்குச் சென்றும் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடனும் வண்ணப்பொடிகளை தூவியும் மகிழ்ச்சியாக ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.