2024 ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.
முன்னதாக கடந்த மாதம் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியிப்பட்டது. அதில் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே இருந்தது.
மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் நாடுளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
அதன்படி மே 19 ஆம் தேதி லீக் சுற்றுகள் முடிவடைகிறது. மே 21 ஆம் தேதி குவாலிபைர் 1 அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் எலிமினேடர் 1 மே 22 ஆம் தேதி அகமதாபாத்தில் எலிமினேடர் 2 மே 24 ஆம் தேதி சென்னையிலும் இறுதிப்போட்டி மே 26 ஆம் தேதி சென்னையிலும் நடைபெறவுள்ளது.